Skip to content

திருப்பூர்: கணவன் கண்முன் மனைவி பலாத்காரம் – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்  தனது கணவருடன் வேலை தேடி திருப்பூர் வந்தனர். அவர்கள் புதிதாக இங்கு வந்ததால் எங்கே செல்வது என தெரியாமல்  ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்ததும் ஊருக்கு புதுசு என்பதை அறிந்து கொண்ட 3 வாலிபர்கள், அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள்  ,  ஒடிசாவில் இரு்நது வேலை தேடி வந்திருப்பதாகவும் எங்கே செல்வது என தெரியவில்லை என்றும் கூறினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட 3 பேரும், நாங்கள் வேலை செய்யும் கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறோம் என அழைத்து சென்று அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு கூட்டிச்சென்றனர். அங்கு கணவனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அந்த இளம்பெண்ணை 3 பேரும் கூட்டு  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் திருப்புர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 3 பேரும் பீகாரை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர் நதீம், டானிஷ், முர்சித் என தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து சிறையில் இடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

error: Content is protected !!