கரூர் மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி மாதத்தின் 5 நாள் திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓதுவார் தண்டபாணி தேசிகர் சிறப்பாக செய்திருந்தார். இதில் திருப்பாவை – திருவெம்பாவை குறித்த
விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பக்தர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடிசாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று சிறப்பாக தேர்ச்சி பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.