Skip to content

திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

ரெட்டியூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூபாய் 51.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட ரெட்டியூர் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர்  சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் போன்ற

துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

தொடர்ந்து மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்று துறை சார்ந்த மத்திய மாநில அரசு நலத்திட்டம் குறித்தும் அதன் மூலம் பயனடைவது குறித்தும் பொதுமக்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்தனர் . மேலும் முகாமில் வருவாய்த்துறை கூட்டுறவு துறை தோட்டக்கலை தறை வேளாண்மை துறை சுகாதாரத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என பல்வேறு துறைகளில் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூபாய் 51 லட்சத்து 63 ஆயிரத்து 232 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி வழங்கினார். முகாமில் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!