Skip to content

திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் எதிரில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோயில் எதிரில் 22 அடி உயர ஆஞ்சநேயர் ஆலய நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா வெங்கடகிருஷ்ண ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது.

 

முன்னதாக வியாழன் மற்றும் வெள்ளி வெள்ளி  அன்று காலை மற்றும் மாலை நேரங்களில் யாக வேள்வி அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன வெள்ளி கிழமை அன்று காலை 7 மணி அளவில் மங்கள இசை, 4ம் கால யாக வேள்வி பூஜை, அதன் பின்னர் தம்பதிகள் சங்கல்பம் நடைபெற்று 9 மணி அளவில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஹாகும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!