Skip to content

திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

  • by Authour
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் நித்தியா தம்பதியினருக்கு சபரி வாசன் என்ற மகன் உள்ளார். சபரி வாசன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு முகிலா என்ற பெண்ணுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முகிலா கிருஷ்ணகிரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ஜெகதீசன் இறந்து விட்டதால், சபரி, தனது தாயான நித்யாவுடன் மடவாளத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லப்பள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நித்யா சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 18-ந் தேதி மடவாளத்தில் உள்ள வீட்டில் இருந்து சபரி தனது தாயிற்கு போன் செய்து மனது சரியில்லை நீங்க வாங்க என்று பேசியுள்ளனர். இதையடுத்து இன்று நித்யா மடவாளத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சபரி தூக்கில் பிணமாக மகன் தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா கதறி அழுதார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சபரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!