Skip to content

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 7வயது சிறுமி…. காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சிவா இவருடைய மனைவி லலிதா இவர்களுக்கு கனிஹீ (7) என்ற பெண் பிள்ளை உள்ளது.

இந்த நிலையில் கனிஸ்ரீ வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருடைய பாட்டியான சரசா சிறுமியிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி நாணயத்தை விழுங்கி உள்ளது. இதனால் தொண்டைக்குழியில்

சிக்கிக்கொண்ட நாணயத்தால் சிறுமி திக்கு முக்காடி மயங்கி விழுந்தார்.

இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காப்பாற்ற முடியாது என்று கூறியதன் காரணமாக அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் காது மூக்கு தொண்டை நிபுணரான தீபானந்தன் மருத்துவர் ‌ இன்று விடுமுறையில் இருந்தார் இருந்த போதும் குழந்தையின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்து கனிஸ்ரீ குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.

எனவே குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தது. இதன் காரணமாக குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க மருத்துவர் தீபானந்தனுக்கு நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!