திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசாலா வடை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக கடந்த 1985ம் ஆண்டு நித்ய அன்னபிரசாத திட்டத்தை அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமியை தரிசனம் செய்தபிறகு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு படிப்படியாக அதிகளவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோயில் எதிரே பிரம்மாண்டமான தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்…அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசால் வடை…
- by Authour
