திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை எருது விடும் திருவிழா நடைபெற்றது.விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார்
அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அப்போது அதனை படம் பிடிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் பிரவின் என்பவரை பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரின் மகன் மதன் உள்ளிட்ட சில நபர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த நிருபர் பிரவீன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் குரிசிலாப்பட்டு காவல் நிலைய போலீசார் மதன் மற்றும் செய்தியாளர் ப்ரவின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதனை அறிந்த பத்திரிகையாளர்கள் காவல் துறையினர் செய்தியாளரை தாக்கிய மதன் உள்ளிட்ட சில நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், மேலும் நிருபர் பிரவீன் மீது பொய் வழக்கு பதிவு செய்த மாவட்ட காவல்துறை மற்றும் குருசிலம்பட்டு போலீசாரை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.