விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது அவர் 3 தொகுதிவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் 2 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்குழுவை சந்தித்து பேசுங்கள் என்றும் முதல்வர் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
