விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று கூறியதாவது: விசிக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது போதைக்கு எதிரான மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. மக்கள் பிரச்னைக்காக சாதிய சக்திகள் தவிர எந்த சக்திகளோடும் இணைவோம். ஜனநாயக சக்திகளை இணைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மறுவாழ்வு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மதுக்கடைகளை படிப்படியாக அரசு மூடவேண்டும். இதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். விசிக நடத்தும் கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். எந்த கட்சியும் பங்கேற்கலாம். தேர்தல் அரசியலோடு இதை பொருத்தி பார்க்க வேண்டாம். போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மது போதையை விட சாதி வெறி மிக மோசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.