விசிக தலைவர் திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக- விசிக கூட்டணி கட்சிகள் இடையே எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. விரிசல் உருக்காக வாய்ப்பும் இல்லை. என்னுடைய எக்ஸ் தளத்தில் ஆட்சியில் அதிகாரம் என்ற பதிவு போடப்பட்டதால், அந்த பதிவை பலரும் விவாதம் செய்தனர். அது மேலும் பல விவாதங்களுக்கு வழிவகுத்து விட்டது.
திமுக குறித்து கருத்து தெரிவித்த விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா கூறியுள்ளாரே என கேட்டபோது, உள்கட்சி விவகாரத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து பேசிதான் முடிவெடுக்கப்படும். பொதுசெயலாளா், துணை பொதுச்செயலாளர் உள்பட பலரிடம் நான் தொலைபேசி வாயிலாக பேசி இருக்கிறேன். அவரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.