விசிக தலைவர் திருமாவளவன் இன்று சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் திருமாவளவன் கூறியதாவது:
நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களையும் வலியுறுத்த கோரிக்கை வைத்துளோம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்துடன் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. எனவே தான் பாஜக எடுத்த எடுப்பிலேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வருகிறது.கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள், கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து தண்டிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவல்களை முதல்வரிடம் தெரிவித்தோம்.
இவ்வாறு தி்ருமாவளவன் கூறினார்.