மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய நிதி கேட்டு விரிவான கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டத்தை கூட அறிவிக்கவில்லை. அதே வேளையில் பாஜக மைனாரிட்டி அரசை தாங்கி பிடிக்கும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு நிதியை அள்ளி விட்டு இருக்கிறார்கள்.
ஆனால் மத்திய அரசுக்கு வரி மூலம் நிதி வழங்கும் தமிழ்நாட்டை மத்திய அரசு மறந்தே விட்டது. தமிழ்நாடு என்ற வார்த்தை கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதனால் தமிழக மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். பாஜகவுக்கு தேர்தலில் தமிழக மக்கள் தோல்வி கொடுத்ததால், அந்த கோபம் மோடிக்கு இன்னும் தீரவில்லை. எனவே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. வழக்கமாக நிதி கிள்ளி கொடுப்பார்கள். அந்த கிள்ளியும் இந்த முறை இல்லை என்று தமிழ்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த மோடி தமிழ் மொழி போல ஒரு மொழி உண்டா, உலகத்திலேயே தமிழ் மொழி தான் தொன்மையானது. எனக்கு தமிழ் பேச முடியவில்லை என வருத்தமாக இருக்கிறது என்றெல்லாம் கூறினார். ஆனால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, வழக்கமாக பட்ஜெட் உரை வாசிக்கும்போது தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு திருக்குறளை, அல்லது சங்க இலக்கிய பாடலை எடுத்துக்காட்டுடன் கூறுவார்கள். இந்த முறை திருக்குறளும் மிஸ்ஸிங்.
தமிழ் மக்கள் மீது மட்டுல்ல, திருவள்ளுவர் மீதும் இப்போது மத்திய அரசுக்கு கடுங்கோபம் ஏற்பட்டு உள்ளது என்பதையே இது காட்டுகிறது என தமிழ்நாட்டு மக்கள் மத்திய அரசை கண்டித்து உள்ளனர்.