தஞ்சை மாவட்டம் பாபநாசம் உலகத் திருக்குறள் மைய 292 வது மாதக் கூட்டம் பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டட வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மையத்தின் செயலர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். சங்கர் வரவேற்றார். சிறுகுடி வண்டல் இலக்கிய அமைப்புத் தலைவர் செந்தில் குமார் திருக்குறளில் சமூக நீதி என்றத் தலைப்பில் பேசினார். திருக்குறள் தொண்டு அறக்கட்டளை, வலங்கைமான் அறம் அறக்கட்டளைச் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப் பட்டது. இதில் தில்லை நாயகி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். குருசாமி நன்றி கூறினார்.