உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி இருவருக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பதவியையும், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
இதன் மூலம் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாகி விட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும். அந்த காலியிடத்தை நிரம்ப வரும் மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.