Skip to content
Home » ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

  • by Authour

பள்ளி, கல்லூரிகளில் அட்டவணை போட்டு  பாடம் நடத்துவார்கள். தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அட்டவணை போட்டு பாடம் படிப்பாாகள். ஆனால்  அரியானாவில் ஒரு இன்ஜினீயர் அட்டவணைபோட்டு தன் மனைவிகளுடன் குடும்பம் நடத்துகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:

அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த சீமா என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்கள் குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் போது சீமா, தனது குழந்தையை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றார். என்ஜினீயர் மட்டும் குருகிராமில் இருந்தார். அதன்பிறகு சீமா திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் சீமாவின் கணவருக்கும், அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் என்ஜினீயர், தனது அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கணவருக்கு 2-வது திருமணம் நடந்த விஷயம் சீமாவுக்கு தெரியவந்தது. அவர் கணவரை சந்தித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் சேர்ந்து வாழ மறுத்து வக்கீல் மூலம் விவாகரத்து நோட்டீசு அனுப்பினார்.

அதன்பிறகு சீமாவுக்கும் அவரது கணவருக்கும் சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன. கணவரை விவாகரத்து செய்வதன் மூலம் பெரிய அளவில் இழப்பீடு தொகை கிடைக்காது என்றும், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

மேலும் என்ஜினீயரின் 2-வது மனைவி மூலம் சீமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சீமா விவாகரத்து முடிவை கைவிட்டார். இதையடுத்து மனைவிகள் இருவரையும் தனித்தனியாக வீடு எடுத்து குடித்தனம் வைக்க என்ஜினீயர் முடிவு செய்தார். அதற்கு இருவரும் ஒத்துக் கொண்டனர். அதன்பிறகு முதல் மனைவியின் வீட்டில் வாரத்தில் 3 நாட்களும், 2-வது மனைவியின் வீட்டில் 3 நாட்களும் தங்குவதற்கு என்ஜினீயர் முடிவு செய்தார். ஒரே ஒரு நாள் மட்டும் அவருக்கு விடுதலை. அன்று அவரது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம் 2 மனைவிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த நிலையில் 3வது நாளுக்கும் ஒரு வீடு தேடிவிடுவாரோ என்ற எண்ணம் இரு மனைவிகளுக்கும் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அந்த நாளில் அவரை எப்படி கண்காணிப்பில் வைத்திருப்பது என்றும்,  நல்லவேளை வாரத்திற்கு 7 நாளோட போச்சு…. நாள் நீடித்திருந்தா இந்த மனுஷன் பொண்டாட்டிகளையும்மேலும் அதிகரிச்சிருப்பான் என இருமனைவிகளும் பேசிக்கொள்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *