தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது எஸ்கே பிரொக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளராக என பன்முக திறமைக் கொண்டு திரையுலகில் செயல்பட்டு வருகிறார். இதுதவிர தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிங்கம் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். ஷேரூ என்ற பெயரிடப்பட்டுள்ள 3 வயது ஆண் சிங்கம், தற்போது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ளது. அங்கு வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் அந்த சிங்கத்தின் 6 மாத உணவு மற்றும் மருத்துவ செலவை அவர் செய்வார் என்று கூறப்படுகிறது.