திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் 50 வயதான ராஜகுரு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் நூலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். பணிக்குச் செல்ல முடியவில்லையே என மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.