திருச்சி , திருவெறும்பூர் அருகே துவாக்குடி தெற்கு மலை சமாதானபுரம் பகுதியில் வசித்து வருபவர் யாகப்பன் வயது (69) இவர் இன்று தனது மனைவியுடன் வசித்து வருகிறார் . இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி சென்று விட்டனர். இந்நிலையில் 30 வருடமாக அந்த பகுதியில் வசித்து வருபவராகவும் 2009 வது வருடம் மனைவி பெயரில் பழைய துவாக்குடி கருப்பு கோவில் அருகில் மறைந்த சிங்காரவேல் என்பவரிடம் எனது மனைவி அந்தோணியம்மாள் என்ற பெயரில் 3,150 சதுர அடி உள்ள கூரை வீட்டுடன் கூடிய நிலத்தை 70 ஆயிரம் ரூபாய்க்கு பொதுப்பாதை உள்பட வாங்கி உள்ளேன். தற்சமயம் அந்த
பாதையை எனது வீட்டின் முன்னால் குடியிருக்கும் வீட்டுக்காரர் அம்மாசி அம்மாள், கந்தசாமி மகன் என்பவரான பிரபு என்பவர் பாதையை அடைத்து எனக்கு செல்ல வழி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதை கேட்க போன என்மீது கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறி இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துவாக்குடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரிடம் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது நீங்கள் துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி பலமுறை அலைக்கழிக்கப்பட்டதாக கூறி துவாக்குடி நகராட்சிக்கு இன்று மன உளைச்சலுடன் பெட்ரோல் கேனுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை பறிமுதல் செய்தனர். இந்த தகவலை அறிந்த துவாக்குடி போலீசார் கணவன் மனைவி இருவரையும் மீண்டும் துவாக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.