பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 56.49 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு இன்று (24.02.2024) அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடங்கள்) ரத்தினவேல், உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.