பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இன்று (27/06/2023) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில்,திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி
கருணாநிதி எம்.பி அவர்கள் மாணவி நேத்ரா நேரில் அழைத்து வாழ்த்தி பரிசு வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியிலில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.