Skip to content

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் ரூ.168 கோடி செலுத்த வேண்டும்…உயர்நீதிமன்றம் அதிரடி..

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பேரூராட்சி பகுதியில் ஸ்பிக் நகரில் அமைந்துள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலையானது, விவசாயத்திற்கு தேவையான ரசாயன உரங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தங்கள் தொழிற்சாலையில் தேங்கும் கழிவுகளை தூத்துக்குடி, முள்ளாடு பகுதியில் அரசு நிலத்தை பயன்படுத்தி வருகிறது.

இதற்காக அரசு 1975ஆம் ஆண்டு ஸ்பிக் நிறுவனத்திற்கு 108 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட உத்தரவிட்டது. ஆனால் ஸ்பிக் நிறுவனம், குத்தகைக்கு வேண்டாம். அந்த நிலத்தை தங்களுக்கே கொடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் மனு அளித்து இருந்தது. அரசு விதிப்படி தனியாருக்கு அரசு நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விடமுடியும் என்பதால் ஸ்பிக் தொழிற்சாலை கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்பிக் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், அரசு ஸ்பிக் நிறுவனத்திற்கு ஒதுக்கியது 108 ஏக்கர், ஆனால் அவர்கள் 400க்கும் அதிகமான ஏக்கரில் உள்ள அரசு நிலத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என கூறியது.

இதனை அடுத்து, 1975 முதல் 2008 வரையில் உள்ள காலகட்டத்தில் ஸ்பிக் நிறுவனம் பயன்படுத்திய அரசாங்க நிலத்திற்கு ஒப்பந்த தொகையாக சுமார் 168.73 கோடி ரூபாய் தொகையை செலுத்த வேண்டும் என ஸ்பிக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அதனையையும் இன்னும் 4 வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்ராவிடப்பட்டுள்ளது. மேலும், 2008க்கு பிறகு தற்போது வரை காலகட்டத்திற்கு எவ்வளவு ஒப்பந்த தொகையை ஸ்பிக் நிறுவனம் செலுத்த வேண்டும் என கணக்கிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *