வெள்ளப் பாதிப்பில் சிக்கிய கர்ப்பிணியை நேற்று நேரில் சென்று, வழியில் சென்ற பெரிய வாகனத்தை மறித்து, கர்ப்பிணியை மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி சேர்த்தார். அவருக்கு மருத்துவமனையில் இன்று (20/12/2023) இரவு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. தாய், சேய் நலமுடன் உள்ளனர். இந்த செய்தியை கனிமொழி, தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி தூத்துக்குடி புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்மணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கர்ப்பிணி பெண்மணியை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி, அவரும் அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் கனிமொழி மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது…
- by Authour
