Skip to content

தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வௌியேறி வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகள் வௌ்ளத்தால் சூழ்ந்துள்ளன. குறிப்பாக தூத்துக்குடியில் பல பகுதிகளில் வௌ்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலையில் வௌள்ம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்பி கனிமொழி  டில்லியில் இருந்து தூத்துக்குடிக்கு அவரசமாக இன்று

காலை வந்தடைந்தார். தற்போது தூத்துக்குடி நெடுஞ்சாலை பகுதிகளில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து எம்பி கனிமொழி தனது X-தளத்தில் கூறியதாவது…. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும். உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்.  தொடர்பு எண்: +91 80778 80779 என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனிமொழி கருணாநிதி எம்.பி  வெள்ளப்பகுதிகளிலும் பேருந்தில் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து,பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க படகுகளை ஏற்பாடு செய்து வெள்ளப்பாதிப்புகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!