தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு அரசு மூலம் ஏற்கனவே தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின் பேரில் 13 குடும்பத்திற்கும் கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ. 5 லட்சத்திற்கான கணக்காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 23 பேர் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ. 5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.