தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கனகாவிற்கும் பசுவந்தனையைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கனகா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தென்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.