தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து
கொண்டு,புதிதாக கட்டப்பட உள்ள உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.