Skip to content

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் குடும்பத்துடன் முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மகன் மாரி செல்வன் தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகள் கார்த்திகா என்பவரும், மாரி செல்வமும்  கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண்ணின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கடந்த 30ஆம் தேதி கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு சென்ற மாரிசெல்வம் கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.  பின்னர் கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

 

தூத்துக்குடியில் காதல் திருமண ஜோடி வெட்டிப் படுகொலை- மேலும் 4 பேர் கைது

இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை காதல் திருமண ஜோடி மாரிச்செல்வம் – கார்த்திகாவை, மர்மநபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், இசக்கி ராஜா, ராஜபாண்டி, இளம் சிறார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி புதுமணத் தம்பதி கார்த்திகா – மாரிசெல்வம் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய கருப்பசாமி, பரத் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  பெண் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று கைதான நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!