Skip to content
Home » பிப்ரவரியில் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… ஐகோர்ட்டில் கெளதம் மேனன் தகவல்!

பிப்ரவரியில் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… ஐகோர்ட்டில் கெளதம் மேனன் தகவல்!

  • by Authour

நடிகர் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’. இதில் ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிதி மற்றும் கோவிட் உள்ளிட்ட காரணங்களால், பணி முடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இத்திரைப் படத்தைக் கடந்த நவம்பர் 24-ம் தேதி வெளியிட கெளதம் மேனன் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இந்த படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அதில், சிம்புவை நாயகனாக வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்குவதற்காக கெளதம் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அதற்கு முன்பணமாகக் கடந்த 2018-ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டது.

ஒப்பந்தப்படி அந்த படம் தொடங்கப்படாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குநர் கெளதம் மேனன் திருப்பித் தரவில்லை. இந்நிலையில், தங்கள் நிறுவனத்திடம் பெற்ற தொகையைத் திருப்பி அளிக்காமல் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என அந்த மனுவில் தெரிவித்திருந்தார் ராகவேந்திரா. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தைத் திருப்பி அளிக்கும்பட்சத்தில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடலாம் என நவம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டது.

விக்ரம். கெளதம் மேனன்
விக்ரம். கெளதம் மேனன்

ஆனால், கெளதம் மேனனால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இதுவரை ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிகண்டன், ‘துருவ நட்சத்திரம்’ படத்தைப் பிப்ரவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், இந்த வழக்கை மூன்று வாரத்திற்குத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *