திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் உள்ள புதுக்காட்டு தெரு பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்கலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் .தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கி 15 நாட்களுக்கு மேல் ஆகிறது என்றும் இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.