திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ரெட்டியார்பட்டி கொப்பம்பட்டி உப்பிலியபுரம் பச்சைமலை துறையூர் ஆகிய பகுதிகளில் இரவு சுமார் 2 மணி நேரமாக இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது
இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது
மழை அளவானது 70 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது
இதனால் ஒக்கரை பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின மேலும் சுற்றுலா தளமான விளங்கும் புளியஞ்சோலை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான் கொல்லிமலையில் பெய்த கனமழையால் நீர் வரத்து அதிகமாக உள்ளது
இந்த நீரானது செம்மண் கலந்து வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை
கோடை காலத்தில் பெய்த மழையானது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசதமாக அமைந்தாலும் சுற்றுலா பயணிகளுக்கு வருத்தம் அளிக்கும் நிலையில் அமைந்துள்ளது