திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இரவு நேரங்களிலும் நள்ளிரவு 12 மணி வரையிலும் அதிகாலை 3 மணியிலிருந்தும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் துறையூரில் இருந்து திருச்சி சென்னை,சேலம்,அரியலூர், மதுரை, பெரம்பலூர், ஆத்தூர் தம்மம்பட்டி. நாமக்கல், தஞ்சாவூர். கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர் இந்நிலையில் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் 2018 2019 நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த பல நாட்களாக எரியாமல் உள்ளதாகவும் இரவு நேரங்களில் வெளியூர் செல்ல வரும் பயணிகள் இருட்டில் அவதிப்பட்டு வருவதாகவும் பேருந்து வெளிச்சத்தில் பயணிகள் சென்று
வருவதாகவும் கூறப்படுகிறது. இதே போல் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள அம்மா உணவகம் அருகேயும் ஒரு உயர் கோபுர மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆறு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது எனவும் அவற்றில் ஒன்று கூட எரியவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் . இவற்றை பராமரிக்கும் நகராட்சி நிர்வாகம் மின்விளக்குகளை பற்றி கண்டு கொள்வதில்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களை சீர் செய்து வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.