தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மின் பகிர்மான வட்டம்/பெருநகரம், மேற்பார்வை பொறியாளர் ஆணைக்கினங்க துறையூர் செயற்பொறியாளர்/இ&கா/ திரு.பொன்.ஆனந்தகுமார் தலைமையில் துறையூர் கோட்டத்திலிருந்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், களப்பணியாளர்கள் என் 15 குழுக்களாக பிரிந்து வடக்கு / துறையூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கோவிந்தாபுரம், கிருஷ்ணாபுரம், து.ரெங்கநாதபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், பெருமாள்பாளையம் பகுதிகளில் 850 மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டு மூன்று மின் இணைப்புகளில் மின் திருட்டு கண்டறியப்பட்டு அபராத தொகையாக ரூ.13,284/- வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில மின் இணைப்புகளில் சிறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு குறைபாடுகளை நீக்கவும், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படியும் எந்த உபயோகத்திற்கு மின்சாரம் பெறப்பட்டதோ அந்த உபயோகத்திற்கு மட்டும் மின்சாரத்தை பயன்படுத்தும்படியும் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் அந்த குறிப்பிட்ட வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அண்டை வீட்டாரின் பயன்பாட்டிற்கோ நீர் (இறைத்து) விற்பனைக்கோ பயன்படுத்தக் கூடாது அவ்வாறு பயன்படுத்துவதால் மின்னிணைப்பு துண்டிப்பு, அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவே கட்டுமானப்பணிகளுக்கு தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும் என்றும் செயற்பொறியாளர் தெரிவித்தார்.