மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வெகுஜன பொதுமக்கள் என மோட்டார் வாகன திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டதிருத்தம், தொழிலாளர் விரோதச் சட்டம் மற்றும் பொதுமக்களை பாதிப்பதை கண்டித்து நாடெங்கும் பல்வேறு போராட்ட இயக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
2004ம் வருடம் ஜனவரி 1ற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை, 2001-ம் ஆண்டு பாஜக அரசாங்கத்தால் என் பி எஸ் என்கிற திட்டத்தை உருவாக்கி அமல்படுத்த புதிய சட்ட வரையறையை உருவாக்கியது.
அதன் தொடர்ச்சியாக புதிய பென்ஷன் திட்டம் என்பது சட்டமாக 22.12.2003 அன்று சட்டம் ஆகி அதன்படி 01.01.2004 -ற்கு பிறகு பணியமர்த்தப்படும் அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் என்கிற திட்டம் அமலுக்கு வந்தது.
2004-ம் ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்ட இயக்கங்களை கடந்த 20- ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து நேஷனல் ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி,
முத்தாய்ப்பாக NATIONAL JOINT ACTION_COMMITTEE – ஜாயிண்ட் ஃபோரம் ஆஃப் ரெஸ்டோர் ஓபிஎஸ் எனும் கூட்டமைப்பை உருவாக்கி அதில் மத்திய, மாநில தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், ஆசிரியர் கூட்டமைப்புகள், இரயில்வே துறை தொழிற்சங்க சம்மேளனங்கள் மற்றும் பல்வேறு கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து 21.01.2023 அன்று கூட்டாக புதிய பென்ஷன் திட்டத்தை விலக்கிக் கொள் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து என்கிற கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசிற்கு எதிராக போராடி வருகின்றது.
அதனைத் தொடர்ந்து, 21.01.2023 முதல் ஒவ்வொரு மாதமும் 21-ம் தேதி நாடு தழுவிய ஆரம்பகட்ட போராட்ட இயக்கங்களை ஆரம்பித்து நடத்தியது.
போராட்ட இயக்கங்களை வலுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட்-10 -2023 அன்று மாநகர் டில்லியில் மாபெரும் பேரணி கூட்டத்தை நடத்தி பாஜக அரசின் கவனத்தை ஈர்த்தது பேரணி கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்திட வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தம் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் 2023-நவம்பர்-21 மற்றும் 22- தேதிகளில் வேலை நிறுத்த வாக்கெடுப்பை மேற்கொண்டன. வேலை நிறுத்தம் முழுமையாக வெற்றி பெற ஆயத்த பணியாகவும், மத்திய அரசை எச்சரிக்கும் வகையிலும் மேற்படி கூட்டமைப்பு நாடு தழுவிய 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று 8ம் தேதி முதல் 11ந்தேதி வரை நடத்திட முடிவு செய்து முதல் நாளாக நாடெங்கும் மத்திய அரசிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையின் முன்பு , திருச்சி ஆர்ட்னன்ஸ் பேக்டரி திருச்சி எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் நேஷனல் டிஃபன்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் இரண்டு தொழிற் சங்கங்களும் இணைந்து சம்மேளனங்கள் ஏ ஐ டி இ எஃப் மற்றும் ஐ என் டி டபுள் யு எஃப் வழிகாட்டுதலின்படி 24- மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றது. இதில் ஓ எப்டி இயு தலைவர் ஆர் ஜெயபால்
பொதுச்செயலாளர் பி ஸ்ரீனிவாசுலு என் டி டபிள்யூ தலைவர் எஸ் அந்தோணி சார்லஸ், பொதுச் செயலாளர் எஸ் வேதநாயகம் உள்ளிட்ட பலர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதே போல் எச் இ பி எஃப் தொழிற்சாலையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஐ என் டி டபுள்யூ எஃப் சம்மேளனத்தின் அமைப்புச் செயலாளர் ஆர் கந்தசாமி தலைமையில் கூட்டணி சங்கங்களான எச் ஏ பி எஃப் அம்பேத்கார் எம்ப்ளாயீஸ் யூனியன்,எச் இ பி எஃப் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகளான சங்கத்தின் பொதுச்செயலாளர் என் தனசேகர், பொருளாளர் வே சத்யராஜ்,உணவக குழு உறுப்பினர் எஸ் மணி, அமைப்பு செயலாளர்களான ஏ பிரட்ரிக், கே சரவணன் உள்ளிட்ட பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.