கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மக்கள் சினிமாஸ் தியேட்டரில் துணிவு திரைப்படத்தின் இரண்டாம் காட்சியான 7 மணி காட்சியில் 17 டிக்கெட் மட்டும் விற்பனையானதால் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படம் கரூர் மாநகர் பகுதியில் 3 திரையரங்குகளிலும் அரவக்குறிச்சி பகுதியில் ஒரு திரையரங்கம் என மொத்தம் 4 திரையரங்குகளில் படம் வெளியாகி இருந்த நிலையில் துணிவு திரைப்படம் அரவக்குறிச்சி மக்கள் சினிமாவில் காலை 4 மணிக்கு முதல் காட்சியாக திரையிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக கொண்டாடினா்.
அடுத்த காட்சி 7 மணிக்கு ஓட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் துணிவு படத்திற்கு 300 டிக்கெட் களில் 17 டிக்கெட் மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் போதிய டிக்கெட்டுகள் விற்பனையாகாததால் 7 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. துணிவு திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அரவக்குறிச்சியில் இரண்டாம் காட்சியான 7 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 10:45 மணி காட்சிக்கு 56 டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.