பொங்கல் திருநாளையொட்டி கடந்த 11ம் தேதி அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய படங்கள் வெளியானது. திருச்சியில் முதல் நாளில் அஜீத் படமான துணிவு 63.7 லட்சம் வசூலைஅள்ளியது. வாரிசு படத்திற்கு முதல்நாளில் 35.2 லட்சமே வசூலானது.
2வது நாளும் திருச்சியில் துணிவு திரைப்படமே வசூலில் சாதனை புரிந்து உள்ளது. 2ம் நாளில் துணிவு14 திரையரங்குகளில் 52 காட்சிகள் திரையிடப்பட்டது. அதன் மூலம் 30.2 லட்சம் வசூலானது.
வாரிசு 2ம் நாளில் திருச்சியில் 13 தியேட்டர்களில் 56 காட்சிகள் நடத்தப்பட்டு ரூ.26.1 லட்சம் வசூலித்துள்ளது.