எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்துக்கான புரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன. வாரிசு படக்குழு தரப்பில் ஆடியோ லாஞ்ச் வைக்கப்பட்ட நிலையில், துணிவு படக்குழு தரப்பில் வேறுவிதமான புரோமோஷன் செய்யப்பட்டுள்ளன.
படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஸ்கை டைவ் மூலம் துணிவு போஸ்டரை வானத்தில் பறக்கவைத்துள்ளது லைகா நிறுவனம். துபாயில் ஸ்கை டைவ் மூலம் விளம்பரப்படுத்துவது புகழ்பெற்று வருகிறது. அந்த அடிப்படையில் துபாயில் ஸ்கை டைவ் மூலம் துணிவு போஸ்டரை வானத்தில் பறக்கவைத்து விளம்பரம் செய்துள்ளது. இதில், வரும் 31ம் தேதி இதே பாணியில் இதே இடத்தில் துணிவு படத்தின் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. மேலும்அந்த நாளை “துணிவு நாள்” (ThunivuDay) என்றும் லைகா நிறுவனம் சொல்ல, இப்போது #ThunivuDay ட்ரெண்ட் ஆகி வருகிறது.