திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்த திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது ….. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த செய்தி தான் இது. தற்பொழுது பதவியேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் அவரது பணிகள் இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். உதயநிதி ஸ்டாலின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது , அவர் மக்களை நேசிக்கக் கூடிய மனிதர், மக்களிடம் அன்பாக பழகக்கூடிய மனிதர் அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என நிச்சயம் நம்புகிறேன் என்றார்.