நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள் கங்கையில் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்ததாகவும் கங்கை தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்திதபோது நீ மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள் என கங்கைக்கு சிவபெருமான் வரம் அளித்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. அதன்படி புண்ணிய நதிகளான யமுனா, சரஸ்வதி, கங்கையுடன் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடி தமது பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம்.
ஐப்பசி 30 நாட்களும் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். . இன்று ஐப்பசி மாதம் தொடங்கியது. இம்மாதம் முப்பது நாட்களும் காவரி துலாக்கட்டத்தில் புனிதநீராடி பக்தர்கள் தமது பாவங்களை போக்கிக் கொள்வர்.
மயிலாடுதுறை நகரில் துலாக்கட்டக் காவிரியில் நீர் இல்லாத நிலையில், நகராட்சி நிர்வாகம் போர்வெல்மூலம் துலாக்கட்டத்தில் தண்ணீர் தேக்கியும், பைப் மூலம் புனிதநீர்
தெளித்தும் வரு கின்றனர். மயிலாடுதுறை நகரில் உள்ள அபயாம்பிகை உடனாகிய மயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், தெப்பக்குள காசி விஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளி. அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தீர்த்தவாரி உற்சவம் ஆகியன நடைபெறுகிறது. இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடுதற்கு சிரமத்துடனே சென்றாலும் நகராட்சி ஏற்பட்டால் ஷவரில் நீராடி திருப்தியுடன் செல்கின்றனர். காலையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இன்று மதியம் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறும்போது பக்தர்கள் அதிக அளவில் திரளுவார்கள்.