டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைப்’ படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் குறித்து படக்குழுவினர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ ஆர். ரஹ்மான், நடிகர் சிம்பு, நடிகைகள் த்ரிஷா, அபிராமி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் பாராட்டி பேசினார். பின்னர் இயக்குனர், இசையமைப்பாளர், தொழில் நுட்ப குழுவினர் அனைவரையும் பாராட்டி பேசினார். அப்போது கமல் கூறியதாவது:
என்னையும், ரஜினியையும் இருதோள்களில் சுமந்தது மீடியாக்கள் தான். மணிரத்தினம் காலையிலேயே வந்து விடுவார். அதனால் அவரை அஞ்சரை மணி ரத்தினம் என்போம். மணிரத்தினமும், ரஹ்மானும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள்,
என் மீது பாசம் வைப்பதில் அவரது தந்தை டிஆரையும் மிஞ்சிவிட்டார் சிம்பு. டிஆர் என்மார்பில் சாய்ந்து அன்பு செலுத்துவார். இவர்(சிம்பு) இந்த தலைமுறை எப்படி இருப்பாரோ என நினைத்தேன். அவர் எட்டு அடி என்றால் இவர் 16 அடி பாய்கிறார். என்மீது அதிக பாசம் காட்டுகிறார். பல வருடங்கள் ஆனாலும் எனக்கும் மணிரத்தினத்துக்கும் இடையே எதுவும் மாறவில்லை. எங்களுடைய வியாபார உலக்தில் பெயர் போட்டா உடனே கணக்கு பார்ப்பாங்க. அது சில நேரம் சரியா வரும், சில நேரம் சரியா வராது. இந்த படம் நன்றாக ஓடும். மேடை அலங்காரத்திற்காக நான் பேசவில்லை. இந்த படத்தில் என்னென்ன கேட்கிறீர்களோ அதெல்லாம் இருக்கும். ஆனா வேற மாதிரி இருக்கும்.
முதலில் தமிழில் பேசிய கமல் பின்னர் இனி இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தல் பேசுகிறேன் என ஆங்கிலத்தில் பேசினார்.