நடிகை த்ரிஷா தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக இருக்கிறார். பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 பட வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், லியோ. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். லியோ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா நடித்திருப்பார். இதற்கு முன்பாக கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்திருப்பர்.
இந்நிலையில், த்ரிஷா வீட்டில் ரெய்டு நடந்ததாகவும், அதில் வைர நகை சிக்கியதாகவும் யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிகையாளர் பேட்டி அளித்திருந்தார். அதில் த்ரிஷா வீட்டில் சிக்கிய கோடி ரூபாய் மதிப்புடைய நெக்லஸ் ஒன்று, விஜய் பரிசளித்ததாக கூறியதாக தெரிவித்திருக்கிறார்.