திருச்சி மதுராபுரியை சேர்ந்தவர் தங்கவேல்(43). இவர் புலிவலம் பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இவரது குவாரிக்கு 5நபர்கள் சென்று , நாங்கள் நாதக நிர்வாகிகள். கட்சிக்கு பணம் கொடுங்கள், பணம் தராவிட்டால் இந்த குவாரியில் நடக்கும் முறைகேடுகளை எங்கள் யூ டியூபில் வெளியிடுவோம் எனக்கூறி செல்போனில் படம் பிடித்தனர்.
அதற்கு தங்கவேல், நான் முறைப்படி குத்தகைக்கு எடுத்து குவாரி நடத்துகிறேன். உங்களுக்கு பணம் தரமாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அவர்கள் குவாரி குறித்து யூ டியூபில் அவதூறுகளை வெளியிட்டனர். இது குறித்து தங்கவேல் புலிவலம் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்ணச்சநல்லூர் தொகுதி நாதக இணை செயலாளர் அருண்குமார்(32), திருச்சி மேற்கு தொகுதி செயலாளர் செல்லதுரை, ராஜாங்கம், ஆனந்தன், தனபால், வினோத் ஆகிய6 பேரை தேடி வந்தனர். இவர்களில் ராஜாங்கம், செல்லதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.