தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடைசியாக தமிழில் அவர் நடித்த ‘கார்கி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான ‘விராட பருவம்’ நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது தமிழில் தேசிங்கு பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் ‘SK21’ படத்தில் நடித்து வருகிறார்.
அவரது தங்கை பூஜா கண்ணன் சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இதையடுத்து அவர் எந்த திரைப்படமும் நடிக்கவில்லை. இந்நிலையில், அவர் தனது காதலரின் புகைப்படத்தை பதிவிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனராம்.