Skip to content
Home » தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற கடன் தொடர்பு முகாமில் தொழில் முனைவோர் 1217 பேருக்கு ரூ.51.23 கோடி கடன் உதவியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கடன் தொடர்பு முகாம் தமிழகத்தில் இந்த நிதியாண்டில் முதல் முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் 2022-23-ஆம் நிதியாண்டில், முழுமையாக இலக்கை அடைந்தமைக்காக மாநில அளவிலான விருதினை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!