தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வலப்பிரம்மன் காடு, கோவில் விழா மேடை, ரூபாய் 12 லட்சத்தில்
தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து பின்னவாசல் ஊராட்சி, கொல்லைக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் மழையால் வீடு இடிந்த சந்திரா, ரம்யா ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஐயாயிரத்தை சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கினார்.
இதில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இளங்கோ, திமுக கிளை நிர்வாகிகள் திருப்பதி, பிரபாகர மூர்த்தி, சங்கர், சுந்தரலிங்கம், செல்வம், ஆர்.இளங்கோ, ஜி.நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.