வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல், சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே நேற்றிரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரத்தில் பெரும் பாதிப்பு இல்லை . தேவநேரி ரோடு கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்தது. நாகப்பட்டினம் ,காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூரில் பெரும் பாதிப்பு ஏதும் இல்லை. மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சென்னையில் 300 மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ. மழை பதிவானது.