திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை எனும் படைக்கலத் தொழிலக உயர்நிலைப் பள்ளியின் 58வது ஆண்டு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு படைக்கல பணிமனையின் இயக்குநர் சிரிஷ் குமார் தலைமை வகித்தார்.
பாதுகாப்புத்துறை பிரிவு யூனிட் – ஆவடி, துணை இயக்குநர் ஜெனரல் விண்டேஷ் குமார் சிங் முன்னிலை வகித்தார்.
படைக்கலப் பணிமனையின் மேலாளர் ஏ. கே. சிங்
பாதுகாப்புத்துறை பிரிவு யூனிட் – ஆவடி இணை இயக்குனர் விக்னேஸ்வரன்,படைக்கல பணிமனையின் துணைப் பொது மேலாளர் டாக்டர் அரிய சக்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில்
கல்வி இணைச் செயல்பாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மதிப்பெண்களில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் சித்ரா இளஞ்செழியன் 1330 திருக்குறளுக்கும் புது கவிதையாக எழுதிய “குறல் மொழிந்த கவிதை” நூல் வெளியிடப்பட்டது. கவிதை நூலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை அமுதா வரவேற்று பேசினார். ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் சித்ரா இளஞ்செழியன் வாசித்தார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மோகன் அலெக்சாண்டர் தமிழ் ஆசிரியர் தொகுத்து வழங்கினார்
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் ஜேக்கப் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் செய்தனர். இதில் பள்ளி மாணவ மாணவியர் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
