திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு பனியன் குறிச்சி கோலகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தல பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகியவைகளில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர்- இளம்பெண்கள் பாசறை ஆகிய அமைப்புகளின் நோட்டுகளை பூத் கமிட்டி கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆய்வு செய்தார். மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் உடன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் S.K.D.கார்த்திக் மாவட்ட பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ மாவட்ட கழகத் துணைச் செயலாளர் திருமதி. சுபத்ரா தேவி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திருமதி. சாந்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. செல்விமேரிஜார்ஜ் மாவட்ட அமைப்பு செயலாளர் ஓட்டுனர் செயலாளர் S.பாஸ்கர் மாவட்ட கலை பிரிவு செயலாளர் MP ராஜா முன்னாள் ஊராட்சி செயலாளர் திரு.பாலமூர்த்தி திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் த.முருகா வடக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் அண்ணாதுரை மற்றும் கிளைக் கழக செயலாளர் மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..
- by Authour
