திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சுகம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முரளி இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியா (40) இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சத்தியா குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29ம் தேதி தனது குழந்தையுடன் சத்தியா கீழ கல்கண்டார் கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் (30ம் தேதி ) மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் வெளிகேட் கதவு மற்றும் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவும் திறக்கப்பட்டு இருந்தது கண்டு சத்தியா அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக துவாக்குடி காவல் நிலையத்தில் சத்தியா புகார் கொடுத்து உள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் விசாரனை செய்த போது பீரோவில் இருந்த 5 பவுன்டாலர் செயின்,ச 3 பவுன் சிறிய செயின், 3 பவுன் வலையல் என 11 பவுன் நகை மற்றும் 300 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.