பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் புதைந்தனர். இந்த சம்பவத்தில் கனமழை காரணமாக பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டது. அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவும், மேலும் ஒரு துணைக்குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. இதனிடையே, மழை குறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மண்சரிவில் சிக்கிய 7 பேரில் 7 பேரின் சடலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் ேமற்கொள்ளப்பட்ட மீட்புபணியினை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.